

புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும் வாரம். பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் குரு கேது செவ்வாய் சேர்க்கை உள்ளது. தடை தாமதங்கள் அகலும். முயற்சிகள் வெற்றியாகும். தொழில் வளர்ச்சி மன நிறைவு தரும். டிராவல்ஸ், குளிர்பான விற்பனை, உணவுத் தொழில் மிகுந்த லாபம் பெற்றுத் தரும். தொழில் போட்டிகள் குறையும். உத்தியோக அனுகூலம் உண்டு. புதிய தொழில் முதலீட்டிற்கு ஏற்ற நேரம். ராஜ யோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். தடைபட்ட சொத்து விற்பனை சாதகமாகும். உயில் எழுதுவதற்கு உகுந்த காலம். இதுவரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல நேரும்.மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும். மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். அதனால் சில செலவுகளும் வரும்.திருமண முயற்சி சாதக மாகும். சஷ்டி விரதம் கடைபிடித்து மஞ்சள் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.