விருச்சிகம்- 2026 வார ராசிபலன் 23.8.2026 முதல் 29.8.2026 வரை

புதிய பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
Viruchigam
Published on

விருச்சிகம்

மனக்கவலைகள் நீங்கி புத்துணர்வு உண்டாகும் வாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரிய பகவான் ஆட்சி பலம் பெற்று புதன் கேதுடன் சேர்க்கை பெற்றுள்ளார். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். பல வருடமாக எதிர்பார்த்த வாரிசு இல்லாத சொத்து உரிய அங்கீகாரத்துடன் தேடி வரும். வீடு, வாகனம் வாங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகும். அதற்கான கடன் உதவியும் கிடைக்கும். பயன்படாத சொத்தை விற்று கடன் அடைக்க ஏற்ற நேரம்.தொழில் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சிலர் புதிய வேலைக்குச் செல்வார்கள். பெயர் சொல்ல வாரிசு உண்டாகும். புதிய பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை பய உணர்வு மனதை வாட்டும். குல தெய்வ அருள் கிட்டும். வெளியூரில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும். பண வரவு சரளமாகும். சகோதர சகோதரியின் திருமண முயற்சி வெற்றி தரும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகமாகும். பெண்களுக்கு பிறந்த வீட்டு சொத்து உரிய முறையில் வந்து சேரும். மேலும் பல பாக்கியங்களை பெற மகாலட்சுமியை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com