

பாக்கிய பலம் நிறைந்த வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய் நீச்சபங்க ராஜயோக நிலையில் சஞ்சரிக்கிறார். எண்ணங்களும் லட்சியங்களும் செயல் வடிவம் பெறும். எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். சக ஊழியர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். வாகனங்களுக்கு பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். சிலர் அரசு வேலைக்கு முயற்சி செய்வார்கள் அண்டை, அயலாருடன் இருந்த தகராறுகள் விலகும். உங்களின் அனைத்து செயல்பாடுகளும் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் நிலவும். பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையில் கணிசமான லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் முறையாக பித்ருக்களை வழிபட மூன்று தலைமுறை முன்னோர்கள் சாபம் விலகும். பசுவிற்கு பழம், அகத்திக்கீரை வழங்கவும்.