

பாக்கிய பலன்கள் நடக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வை ராசியில் பதிகிறது. தைரியம், தெம்பு, ஞாபகசக்தி, ஆரோக்கியம் அதிகமாகும். சிந்தித்து செயல்படுவீர்கள். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்கள் ஆர்வத்தை குறைப்பது நல்லது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை உணரும் ஆற்றல் கூடும். வேலை இன்மை மற்றும் வியாபார ஏற்ற இறக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சீராகும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரவு மகிழ்வை தரும். உங்களின் திடீர் வளர்ச்சி சமுதாயத்தில் தனி அந்தஸ்த்தை பெற்றுத்தரும். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. துர்க்கை வழிபாட்டால் நன்மை களை அதிகரிக்க முடியும்.