

மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நீச்சம் பெறுகிறார். அங்கு ராசியில் உச்சம் பெற்ற 2,5ம் அதிபதியான குரு பகவான் இருப்பதால் இது நீச்சபங்க ராஜயோகமாகும். இதுவரை சந்தித்த சோதனைகள் சாதனைகளாக மாறும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். வரவும், செலவும் உண்டு. சிலர் வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பீர்கள். தொழில் உத்தியோகத்தில் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும். குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக இருப்பதால் பூப் புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். வயோதிகர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் நிறைவடையும். மேலும் வளம் பெற தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்பது நல்லது.