விருச்சிகம்- 2026 ஆவணி மாத ராசிபலன்

தொழிலில் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
Viruchigam
Published on

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்ட மத்தில் சஞ்சரித்து தன ஸ்தானத்தைப் பார்க்கிறார். எனவே பணவரவு திருப்தி தரும். இடம், பூமியால் லாபம் உண்டு. எதையும் திட்டமிட்டபடி செய்து வெற்றி காண்பீர்கள். குரு பகவான் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், வெற்றிச் செய்திகள் அடுக்கடுக்காக வந்துசேரும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 6-க்கு அதிபதியான செவ்வாய் 8-ல் இருப்ப தால் 'விபரீத ராஜயோக' அடிப்படையில், திட்டமிடாமல் செய்யும் காரியம் கூட வெற்றிபெறும்.

சிம்ம - புதன்

உங்கள் ராசிக்கு 8, 11, ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று சிம்ம ராசிக்கு செல்கிறார். லாபாதிபதியான புதன், தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய திட்டங்களைத் தீட்டி அதை செயல்படுத்துவீர்கள். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அஷ்டமாதிபதியாகவும் புதன் இருப்பதால் இடமாற்றம். வீடு மாற்றம். தொழில் மாற்றம் ஏற்படலாம். வரன்கள் வாசல் தேடி வந்துசேரும். பிள்ளைகளின் மணவிழாக்கள், பெற்றோரின் மணிவிழாக்கள், உடன்பிறப்புகளின் வழியில் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேகத்தோடும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

துலாம் - சுக்ரன்

ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன். துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், 12-ல் சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. என்றைக்கோ வாங்கிப் போட்ட இடத்தில் 'இன்னும் வீடுகட்ட முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு. இப்பொழுது வீடு கட்டிக் குடியேறும் வாய்ப்பு உருவாகும். பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டு, புதிய வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அதற்கான முயற்சி கைகூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிக அலைச்சலை மேற்கொள்ளும் பொழுது, உணவிலும் கட்டுப்பாடு செலுத்துவது அவசியம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ-மாணவியருக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com