தனுசு- 2026 வார ராசிபலன் 16.8.2026 முதல் 22.8.2026 வரை

வியாபாரத்தில் நிலவிய தேக்க நிலைமாறி நல்ல லாபம் கிட்டும்.
Thanusu
Published on: 

தனுசு

முக்கிய பணிகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ளார். இதுவரை பட்ட சங்கடங்கள் விலகும். சாதுர்யமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசு வழியில் உயர் பதவிகள் வகிக்கும் யோகம் உண்டாகும். சம்பள உயர்வு இடப்பெயர்ச்சிக்கு வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். திட்டமிட்டு வெற்றி பெற குடும்ப உறவுகள் உதவுவார்கள். செல்வாக்கு, புகழ் ஆகியவை கூடும். பிள்ளைகளால் குடும்ப வருமானம் உயரும். கடன் சுமை குறையும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும். வியாபாரத்தில் நிலவிய தேக்க நிலைமாறி நல்ல லாபம் கிட்டும். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. வாடகை வருமானம் தரக்கூடிய புதிய சொத்துக்கள் சேரும். இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த சொத்துக்களுக்கு நல்ல வாடகை தாரர்கள் கிடைப்பார்கள். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து சந்தன அபிஷேகம் செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com