தனுசு- 2026 வார ராசிபலன் 25.10.2026 முதல் 31.10.2026 வரை

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
Thanusu
Published on: 

தனுசு

புதிய முயற்சிகள் வெற்றியாகும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் அதிசாரமாக ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உடன் சேர்க்கை பெறுகிறார். எண்ணங்கள் சிறப்பாக நிறைவேறும். கோட்சார கிரகம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சிந்தனைகளும் திட்டமிட்ட செயல்களும் வெற்றி தரும். குடும்பத்தின் மேல் இருந்த கண் திருஷ்டி அகன்று நல்ல ஆரோக்கியம் நிலவும். சமுதாய அந்தஸ்து, வெற்றி, புகழ் செல்வாக்கு பெறுவீர்கள். வீட்டிலும், தொழில் இடத்திலும் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தொழில் குறுக்கீடுகளும் தாமதங்களும் தகறும். அதிர்ஷ்டம் பற்றிய ஆர்வம் அதிகரிக்கும். வயோதிகர்களுக்கு ஆயுள் ஆரோக்கிய பயம் அகலும். மூத்த மருமகன் சொத்து பிரிப்பதில் தன் ஆதிக்கத்தை செலுத்துவார். புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பெண்களுக்கு தாய் வீட்டு தீபாவளி சீதனம் மன நிறைவைத் தரும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சிலர் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். சிலருக்கு மறுமணம் நடக்கும்.பௌர்ணமி அன்று ஆன்மீகப் பெரியோர்களின் நல்லாசிகளை பெறவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com