தனுசு- 2026 வார ராசிபலன் 23.8.2026 முதல் 29.8.2026 வரை

புதிய வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும்.
Thanusu
Published on: 

தனுசு

நினைத்தது நடக்கும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் அடைந்து தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். பேச்சுத் திறமையால் நினைத்ததை சாதிப்பீர்கள். முக்கிய கிரக நிலவரம் சாதகமாக உள்ளது. உங்கள் திறமைகள், திட்டம் செயல்பாட்டில் மாற்றம் உண்டாகும். சத்ரு ஜெயம், வெற்றிமேல், வெற்றி உண்டாகும். போட்டி, பொறாமைகளை வெல்வீர்கள். கடன் தொல்லை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவேற்றி மகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் அமைப்பு உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். பிணி பீடைகள் சீராகும். புதிய தொழில் ஆரம்பிக்கலாம் அல்லது நிறுத்தி வைத்த தொழிலை மீண்டும் தொடங்கலாம். விசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும். சிலர் பிழைப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்ல திட்டமிடலாம். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு சாதகமான பதில் வரும். எல்லாம் திட்ட மிட்டபடி நடந்தாலும் சிறு சிறு மன சஞ்சலம் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை சிவ வழிபாடு செய்யவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com