

லாபகரமான வாரம். லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த வாரத்தினை பிரகாசமாக்கும். தொடர்ச்சியான லாபத்தால் அதிக முதலீடின்றி வியாபாரம் பெருகும். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறுது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். பல வழிகளில் வருமானம் வந்தாலும் உபரி பணம் கிடைக்காது. வியாபார பங்குதாரர்களுடன் வரவு, செலவு தொடர்பான மன பேதம் தோன்றும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற இடமாற்றத்தால் மன சஞ்சலம் அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி வீட்டை அழகு படுத்துவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். முக்கியமான, பெரிய பணப் பரிவர்த்தனைகளுக்கான ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவீர்கள். வைத்திய செலவு குறையும். உடன் பிறந்தவர்களால் சகாயமான பலன்கள் ஏற்படும். பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய தடைகள் அகலும். வெளிநாட்டு உறவினர்கள் மூலம் அனுகூலமான பதில் வந்து சேரும். நலிந்தவர்களின் தேவையறிந்து உதவி செய்வதால் சமுதாய மரியாதை கிடைக்கும்.