

சாதகமும் பாதகமும் கலந்த வாரம். ராசி அதிபதி குரு பகவான் செவ்வாயுடன் இணைந்து ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.குடும்ப ஸ்தானத்தில் ராகு நிற்பதால் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் வேலை மாற்றம் மற்றும் இடமாற்றம் கவலையைத் தரும்.பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தை சுபமாக முடியும். சத்ருக்கள் தொல்லை அகலும். கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.உங்கள் ராசிக்கு இது அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதால் புதிய தொழில் முதலீடுகளில் நிதானித்து செயல்பட வேண்டும். வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். வயதானவர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். 30.11.2026 அன்று காலை 9.42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சைக் குறைக்கவும். காது,மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும். சிலருக்கு கடன் பிரச்சனை அதிகரிக்கலாம். பழநி முருகனை வழிபடவும்.