

ஆரவாரமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயும் பாக்கிய ஸ்தான அதிபதி சூரியனும் பரிவர்த்தனை பெறுகிறார்கள் முன்னோர்களின் நல்லாசியையும், குல தெய்வ அருளையும் பெற்றுத் தரவிருக்கும் ஆரவாரமான வாரம். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலை கிடைக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். திருமணம் கூடி வரும். புத்திர பிராப்தம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். இழந்த பதவி தேடி வரும். பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். அரசியல்வாதிகளுக்கு ஆதாயமான காலம். 28.11.2026 அன்று காலை 7.22க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். பௌர்ணமி அன்று குலதெய்வத்தை வழிபடவும்.