தனுசு- 2026 ஆவணி மாத ராசிபலன்

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

Thanusu
Published on

தனுசு

தனுசு ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநா தன் குரு உச்சம் பெற்று அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். 'அஷ்டமத்து குருவாக இருக்கின்றதே' என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவரது பார்வை உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. எனவே பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். இருப்பினும் உடல்நலனில் மட்டும் அதிக கவனம் தேவை. குரு பகவானை தொடர்ந்து வழிபட்டு வருவதன் மூலம் எதிர்காலம் இனிமையாக அமையும்.

சிம்ம - புதன்

ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தொழில் ஸ்தானாதிபதியான அவர், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிந்து எடுத்த முடிவுகளால் வெற்றி கிடைக்கும். அருளாளர்களின் ஆலோசனையும், அனுபவஸ்தர்களின் அறிவுரையும் அவ்வப்போது கைகொடுக்கும். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும். பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதில் இருந்த தாமதங்கள் அகலும். அரசு சம்பந்தப்பட்ட வகையில் ஏதேனும் விண்ணப்பித்திருந்தால் அதில் அனுகூலம் உண்டு.

துலாம் - சுக்ரன்

ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், உங்கள் ராசிநாதன் குருவிற்கு பகைக் கிரகம் ஆவார். எனவே அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதாரத்தில் சிறு சிறு தடைகள் ஏற்படும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றமோ, இலாகா மாற்றமோ வரலாம். பிறரை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். குடும்ப பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். கொடுக்கல் வாங்கல்களில் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அனுபவஸ்தர்களின் அறிவுரை தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

மாணவியருக்கு மறதி அதிகரிக்கும் என்பதால் கவனம் பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாற்றப்பட்ட பொறுப்புகளால் மகிழ்ச்சி கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள், கடுமையான போட்டிக்கு இடையே முன்னேற்றம் காண்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சி பலன்தரும். மாணவ தேவை. பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com