தனுசு- 2026 ஐப்பசி மாத ராசிபலன்

வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
Thanusu rasipalan
Published on: 

தனுக ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஐப்பரி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் இருக்கிறார். மாதத் தொடக்கத்தில் 9-ம் இடத்திற்கு வருகிறார். அப்பொழுது அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதால் நல்ல பலன்கள் பலவும் இம்மாதம் நடைபெறும். மேலும் உங்கள் ராசிநாதனாகவே குரு இருப்பதால் அதன் பார்வை பலத்தால் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் ராகு-கேதுக்களின் மாற் றமும் இம்மாதம் நிகழவிருக்கிறது.

சிம்ம - குருவின் ஆதிக்கம்

மாதத் தொடக்கத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3-6 தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகிறது. ஜென்ம ராசியைப் பார்க்கும் குருவால் நன்மைகள் அதிகரிக்கும். நம்பிக்கை அனைத்தும் நடைபெறும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருளாளர்களின் ஆசியும், அனுபவஸ் தர்களின் அறிவுரையும் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

குருவின் பார்வை 3. 5 ஆகிய இடங்களில் பதிவதால் உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். பலமுறை முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது தரிதமாக நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுவதால் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதை எந்த நேரம் செய்ய நிைனத்தாலும் செய்ய இயலும், பூர்வீக இடங்களைப் பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினைகள் ஓயும். பிறர் வியக்கும் அளவிற்கு வீடு கட்டுவதோ, வாங்குவதோ நடைபெறும் நேரம் இது.

ராகு- கேது பெயர்ச்சி

உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான். 13.11.2026 அன்று 2-ம் இடம் எனப்படும் தன ஸ்தானத்திற்கு வரப்போகிறார். அங்கு சுமார் ஒன்றரை ஆண்டு காலம் வாசம் செய்து தனவரலை அதிகரிக்கச் செய்வார். வியாபாரப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சவாலாகத் தெரிந்த வேலைகளைக் கூட சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாணப் பேச்சு கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. உறவினர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். நினைத்ததை நினைத்தபடி முடிப்பீர்கள். தெளிவான சிந்தனையோடு செயல்படுவீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைத்து தொழில் கூட்டாளிகளாக மாறும் வாய்ப்பு உண்டு.

அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. அரசு வழி சிக்கல்களுக்கு ஆனாக நேரிடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். சர்ப்பக் கிரகங்கள் 8-ல் வரும் பொழுது சங்கடங்கள் அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் தேவை. அதோடு தெய்வ நம்பிக்கையும் அவசியம் தேவை. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். வேலைப்பரு கூடும். அனைாரிடமும் அனுசரித்துச்செல்வது நல்லது.

வியாபாரம்

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டியாளர் தொல்லை நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியரின் ஆதரவு கிடைக்கும். பெண்கள் புகுந்த வீட்டிற்கும். பிறந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்வீர்கள்,

X

Maalai Malar
www.maalaimalar.com