மீனம்- 2026 வார ராசிபலன் 27.9.2026 முதல் 3.10.2026 வரை

பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும்.
Meenam
Published on: 

மீனம்

நெருக்கடி நிலை மாறும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பஞ்சங்கள் விலகும். யாரும் செய்யத் தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும். திருமணம் முடிந்து இதுவரை கருத்தரிக்காத பெண்களுக்கு பாக்கிய பலத்தால் கரு உருவாகும். கருத்தரிப்பில் சிரமம் உள்ளவர்களுக்கு வைத்தியம் பலன் தரும். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். கவுரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி ஏற்படும். வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகள் குறையும். குல தெய்வ, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆடம்பரத்தை, அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும். மகாளய பட்ச காலத்தில் அந்தணர்களின் தேவை அறிந்து உதவவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com