

மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்ற செவ்வாயுடன் சேர்க்கை பெற்றுள்ளார். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் வசீகரமான தோற்றம் ஏற்படும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என இடப்பெயர்ச்சியால் மகிழ்ச்சியும் மன அமைதியும் உண்டாகும். அரசு வேலை முயற்சி சாதகமாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அங்காளி பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும். வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். திருமணத்தடைகள் அகலும். சிலருக்கு மறுமணம் நடக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து சித்தர்களை ஜீவசமாதியில் வழிபடவும்.