மீனம்- 2026 வார ராசிபலன் 18.10.2026 முதல் 24.10.2026

உடலில் இருந்த ஆரோக்கிய குறைபாடு அகலும்.
Meenam
Published on: 

மீனம்

நிம்மதியான வாரம். ராசியில் உள்ள வக்ர சனிக்கு இந்த வாரம் மட்டுமே உச்ச குருவின் பார்வை கிடைக்கும். தடைபட்ட சுப காரியம் தொடர்பான பேச்சு வார்த்தை கைகூடும். வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். அடமானச் சொத்துக்கள், நகைகள் மீண்டு வரும். உடலில் இருந்த ஆரோக்கிய குறைபாடு அகலும். தாய் மாமாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். வீட்டிற்குத் தேவையான அழகு ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் விருப்ப ஓய்வு பெறும் வாய்ப்பு உள்ளது. ஜென்மச் சனியையும் மீறிய சுபபலன் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். அடுத்த மூன்று மாதங்களுக்கு ராசி அதிபதி குரு பகவான் அதிசாரமாக ஆறாம் இடத்திற்கு செல்கிறார். எனவே முக்கியமான பணிகளை இந்த வாரத்தில் முடித்து விட வேண்டும். சற்று குழப்பமான மன நிலை உண்டாகும். எந்த விசயத்திற்கு யாருக்கும் வாக்குறுதியும் தருவதை தவிர்க்கவும். எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடக் கூடாது. பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள் அல்லது வம்பில் மாட்டி விடலாம். பால் அபிசேகம் செய்து அம்பிகையை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com