மீனம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை

சொத்துக்கள் வாங்கும் முன்பு பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம்.
Meenam
Published on: 

மீனம்

சாதகமும் பாதகமும் கலந்த வாரம். ராசி அதிபதி குரு பகவான் ராசிக்கு 6ல் கேதுவுடன் சேர்க்கை பெறுகிறார். வருமானம் ஒரு வழியில் வந்தால் செலவுகள் பல வகைகளில் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் சற்று காலதாமதமாகும். சொத்துக்கள் வாங்கும் முன்பு பத்திரங்களை படித்துப் பார்ப்பது அவசியம். காதல் திருமணம் தடைபடும். சிலர் தவணை முறைத் திட்டத்தில் புதிய வாகனம், நிலம் வாங்கலாம். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டு. தொழிலை மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் போட்டி பொறாமைகளை சமாளிக்கப் பழக வேண்டும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கடுமையாக உழைக்க நேரும். திட்டங்களை செயல்படுத்த போராடினாலும் வெற்றி வாகை சூடுவீர்கள். சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். 7.11.2026 அன்று மாலை 5.15 க்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உஷ்ண நோய் தாக்கம் இருக்கும் என்பதால் காரமான உணவைத் தவிர்க்கவும். தம்பதிகளிடையே அவ்வப்போது வாக்குவாதம் தோன்றி மறையும். சாலையோரம் வசிப்பவர்களுக்கு தீபாவளி பட்சணங்கள் தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X