

பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் சிம்ம ராசிக்கு செல்லப்போகிறார். மாதக் கடைசியில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுகிறது. மேலும் எனி வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. காரிய தாமதங்களும், கவலைகளும் அதிகரிக்கும். வந்த பணம் மறுநிமிடமே செலவாகி தளர்ச்சியை உருவாக்கும். நிலம், பூமி பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். என்ளயிருந்தாலும் நிதானமும், பொறுமையும் தேவைப்படும் நேரம் இது.
மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி மாதம் 3-ந் தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ர கதியில் சஞ்சரிக்கப்போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனித மடைந்து நல்ல பலன்களை அள்ளி வழங்கும். குறிப்பாக 2-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். சச்சரவுகள் ஓயும். பொருளாதார பற்றாக்குறை அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். தேங்கிய காரியங்கள் விறுவிறுப்பாக நடைபெறும்.
குருவின் பார்வை 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் தொழில் வெற்றி நடைபோடும். புதிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு லாபம் பெருக்க முன்வருவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். 'கூட்டுத் தொழிலில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். பார்க்கும் குருவைப் பலப்படுத்த குரு பகவான் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வருவது நல்லது. ஒரு சிலருக்கு பதவி மாற்றங்கள் வரலாம். பொதுவாழ்வில் இருப்பவர்கள் புதிய திருப்பங்களைக் காண்பர். ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் வந்தாலும் மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், 13.11.2026 அன்று 11-ம் இடத்திற்கு செல்லப்போகிறார். அங்கு அவர் ஒன்றரை ஆண்டு காலம் தங்கி இருக்கும் போது பொருளாதாரத்தில் மேம்பாடு ஏற்படும். வாபம் சிறப்பாக இருக்கும். தொழிவில் பழைய கூட்டாளிகளை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக்கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வந்துசேரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம் சுயஜாதகம் பலம்பெற்று இருந்தால், அதை உபயோகப்படுத்திர் கொள்வதில் தவறு இல்லை. சகோதரத்தோடு இருந்த பகை மாறும். 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் ஆன்மிக சுற்றுலா அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் வாய்ப்பு கைகூடும். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்னென்ன பலன் கிடைக்க வேண்டுமோ அவை அனைத்தும் கிடைக்கும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் கைகூடும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் உயரும். பெண்களுக்குச் சுபகாரியப் பேச்சுக்கள் கைடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.