நல்ல மனம் படைத்தவர்களால் புகழப்படும் மீன ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் குரு பகவான் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர், திடீரென மன மாற்றம் ஏற்படும். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை. 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கிறதே' என்று கவலைப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். ஆதாயத்தை விட விரயங்களே கூடுதலாக இருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற இயலாது. தன்னம்பிக்கையும், தைரியமும் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் பலம் இழக்கும் இந்த நேரத்தில் குடும்ப பிரச்சினைகள் தலைதூக்கும். கடன்சுமை கொஞ்சம் அதிகரிக்கலாம். தேவை இல்லாத வீண் விரோதங்கள் அலைமோதும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடன் இருப்பவர்களிடமும், உடன்பிறப்புகளிடமும் விரோதத்தை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
மகர - புதன்
உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். லாப ஸ்தானத்திற்கு வரும் புதனால், தொழில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். வாகனங்கள் வாங்கி மகிழும் யோகம் உண்டு. கல்யாண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் விலகி இருந்த சொந்தங்கள் விரும்பி வந்து இணையும். அரசியலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும்.
கும்ப - புதன்
தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் 12-ம் இடத்திற்கு செல்லும் பொழுது யோகம் தரும் என்பதால் இடம், பூமி வாங்கி மகிழ்வீர்கள். தொழில் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். வெளிநாட்டில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். சுபகாரியப் பேச்சு முடிவாகும். பத்திரப்பதிவில் இருந்த தடை அகலும்.
குரு வக்ர நிவர்த்தி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குரு, வக்ர நிவர்த்தியாவதால் செல்வ நிலை உயரும். செல்வாக்கு மேலோங்கும். உயரதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பர். நண்பர்களைக் கொண்டு நல்ல தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்து அனுகூலம் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு விரிவு செய்யும் முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வருமானம் உயரும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் உற்சாகமும், தன்னம்பிக்கையும் கூடும். மணமாலை சூடும் வாய்ப்பு கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 14, 23, 24, 25, 30, 31, பிப்ரவரி: 1, 4, 5, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.