துலாம்- 2026 வார ராசிபலன் 25.10.2026 முதல் 31.10.2026 வரை

சிலருக்கு விபரீத ராஜ யோகமாக பூர்வீகச் சொத்து கிடைக்கும்.
Thulam
Published on: 

துலாம்

சாதகமும், பாதகமும் நிறைந்த வாரம். ராசியில் நீச்சம் பெற்ற சூரியனுடன் வக்கிரம் பெற்ற புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை பெற்றுள்ளது. வீண் அவமானம் தேடி வரும் என்பதால் சூரியன் துலாம் ராசியை கடக்கும் வரை சர்ச்சைக்குரிய விசயத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. சிலருக்கு விரும்பத்தகாத இடப்பெயர்ச்சி ஏற்படலாம். சிலருக்கு விபரீத ராஜ யோகமாக பூர்வீகச் சொத்து கிடைக்கும். திருமணத்திற்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். இந்த வாரத்தில் சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். சில அசவுகரியம் இருந்தாலும் வாரம் முழுவதும் பல தடைகளையும் கடந்து வெற்றி உண்டாகும். 27.10.2026 அன்று இரவு 9.06 முதல் 29.10.2026 அன்று இரவு 10.06 வரை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் விரயத்தை கட்டுப்படுத்த வேண்டும். அஷ்டம, விரய ஸ்தானம் வலுப்பதால் எச்சரிக்கையாக செயல்படும் காரிங்களில் கூட சறுக்கல் ஏற்படலாம். வேலைப் பளுவால் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிட நேரும். பெண்களுக்கு குடும்பச் சுமை அதிகரிக்கும். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பௌர்ணமி அன்று துளசி அர்ச்சனை செய்து ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com