துலாம்- 2026 வார ராசிபலன் 4.10.2026 முதல் 10.10.2026 வரை

ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலவிய அவஸ்தைகள் குறையும்.
Thulam
Published on: 

துலாம்

நல்ல விசயங்கள் தாமாகவே நடக்கும் வாரம். ராசியில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சுக்கிரன் வக்ரகதியில் சஞ்சரித்தாலும் தன ஸ்தான அதிபதி செவ்வாயின் பார்வை ராசிக்கு இருப்பதால் வார ஆரம்பத்தில் பல நல்ல விஷயங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. பண நெருக்கடி காலத்தில் விலகிய உறவுகளும், உடன் பிறப்புகளும், நண்பர்களும் இப்போது நலம் விசாரிப்பார்கள். சமூகத்தில் நன்மதிப்பு பெறவும் தொழில் ரீதியான நல்ல முன்னேற்றம் பெறவும் சாதகமான வாரமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலவிய அவஸ்தைகள் குறையும். இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி சீராகும். கடனால் ஏற்பட்ட அவமானங்கள் குறையும். தொடர்ந்து வந்த பற்றாக்குறை பட்ஜெட் தீரும். வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள். கொடுக்கல், வாங்களில் நிதானம் தேவை. ஆண், பெண் எச்சரிக்கையாக பழக வேண்டும். உயர்கல்விக்கு விரும்பிய கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கும். திருமணத் தடை அகலும். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேற குடும்பம் துணையாக இருக்கும். மஹாளய அமாவாசை அன்று சுமங்கலி பெண்களுக்கு உணவு தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com