துலாம்- 2026 வார ராசிபலன் 18.10.2026 முதல் 24.10.2026

உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ்ந்த நிலை இனி இருக்காது
Thulam
Published on: 

துலாம்

சாதகமான வாரம். லாப ஸ்தானத்தை நோக்கி குரு பகவான் அதிசாரமாக வந்து கொண்டு இருக்கிறார். எதிர்மறை எண்ணங்கள் விலகி அழகான தோற்றப் பொலிவு உண்டாகும். மனதில் ஏற்பட்ட இனம் புரியாத வேதனைகளும் பயங்களும் முற்றிலும் விலகும். உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ்ந்த நிலை இனி இருக்காது. தொழில், வேலையில் இருந்த இழுபறி நிலை நீங்கும். புதிய வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதிக வருவாய் கிடைக்கும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் திறமையாக செயல்பட்டு அதிக லாபம் ஈட்டுவீர்கள். சிலர் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம் படிப்பு போன்ற சுப செலவிற்காக கடன் வாங்கலாம். அல்லது ஒரு கடன் வாங்கி பழைய கடனை சமாளிக்கலாம். மாணவர்களின் கல்வி ஆர்வத்திற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிலரின் பிள்ளைகள் தொழில், உத்தியோகம் மேற் கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். தடைபட்ட திருமணம் இந்த மாதத்தில் நிச்சயிக்கப்படும். பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com