

அன்பும் காதல் உணர்வும் மிகுந்த துலாம் ராசியினரே.. இதுவரை ராசிக்கு பத்தாம் இடத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக லாப ஸ்தானமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் துலாம் ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்.
இதுவரை ராசிக்கு பத்தாமிடத்தில் நின்ற குருபகவான் அதிசாரத்தில் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். லாப வலையில் சிக்க போகிறார். பதினொன்றாமிடம் என்பது லாப ஸ்தானம், உப ஜெய ஸ்தானமாகும். குரு துலாம் ராசிக்கு 3, 6ம் அதிபதி. 3ம் அதிபதி 11ல் வருவதால் புகழ், அந்தஸ்து, கெளரவம் உயரும். தைரியமும் தன் நம்பிக்கையும் உருவாகும். குரு வெற்றியையும் முன்னேற்றத்தையும் கொடுப்பார். மனக் குழப்பம் விலகி நிம்மதியும் மகிழ்சியும் அதிகரிக்கும். மனதை வாட்டிய அனைத்துப் பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக தீரும். நினைத்தது நினைப்பது நிறைவேறும். எதிரிகள் தொல்லை குறையும்.நோய் தொல்லை கட்டுக்குள் இருக்கும். வைத்திய செலவு குறையும். வெற்றி நடை போடுவீர்கள். தந்தை வெளிநாடு செல்வார். உடன் பிறந்த சகோதர, சகோதரி வகையில் ஒத்துழைப்பும் சகாயமும் உண்டாகும். சிலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். வெகு சிலருக்கு மாமனார் மூலம் தொழில் விருத்தி ஞாபக சக்தி அதிகரிக்கும். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீட்டில் சென்று குடியேறும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் பழைய வீட்டை நவீன வசதிகளுடன் மாற்றி கட்டுவீர்கள். அசையும் சொத்து மற்றும் அசையாச் சொத்து வாங்க ஏற்ற காலம்.காது, மூக்கு தொண்டையில் இருந்த குறைபாடுகள் வைத்தியத்தில் கட்டுப்படும்.
ஆலயத் திருபணிகள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தர்ம காரியங்களில் நாட்டம் ஏற்படும். சிலர் ஆன்மீக ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை சென்று தடைபட்ட வேண்டுதல்கள் மற்றும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேற்று மொழி நண்பர்கள் கிடைப்பார்கள். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். விதவிதமான உணவுப் பொருட்களை சாப்பிடுவீர்கள். வீட்டில் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற சுப காரியங்கள் நடக்கும். வாழ்க்கை துணையின் நோய் தாக்கம் குறைந்து ஆயுள் ஆரோக்கியம் சீராகும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும். வெகு சிலருக்கு விபரீத ராஜ யோகமாக திடீர் தனலாபம், உயில் சொத்து கிடைக்கும். லாப ஸ்தானத்தில் நின்று குரு கொடுக்கும் பலன்கள் அளப்பரியது. இந்த அதிசார குருப் பெயற்சியில் வெற்றி உங்களுக்கே என்பதில் சிறிதும் ஐயமில்லை.
குறுகிய காலத்தில் எதிர்பார்க்காத பல மாற்றமும், முன்னேற்றமும் தேடி வரும். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும். வெளிநாட்டுப் பொருட்கள் உங்கள் இல்லத்தை அழகுபடுத்தப் போகிறது.பங்குச் சந்தை லாபம் மகிழ்ச்சி தரும். வராது என்று முடிவு செய்த பணம் அக்கவுண்டில் வந்து விழும். நல்ல பணப்புழக்கம் ஏற்படும். பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். முதலீடு அதிகமாகும். கடன் தொல்லை குறைய ஆரம்பிக்கும். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் திணறியவர்களுக்கு இடைக்கால நிவாரணம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டு. சொத்துப் பத்திரம், உயில் பத்திரம், ஜாமீன் பிரச்சனை, போன்றவற்றில் இருந்த சர்ச்சைகள் அகலும்.கண் மறைவாக இருந்த தொலைந்த ஆவணங்கள் கிடைக்கும்.அடகு வைத்த நகைகள் மீண்டு வரும். திருட்டுப் போன பொருட்கள் கிடைக்கும்.
உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும். இதுவரை ஆழ்மனதில் இருந்த நிறைவேறாத எண்ணங்களை நிறைவேற்றும் சந்தர்ப்பம் கிடைக்கும். நியாயமான ஆசைகள் நிறைவேறும். திட்டங்கள் வெற்றியடையும். பிள்ளைகளால் பெருமை சேரும். போட்டி பந்தயங்களில் கலந்து வெற்றி பெறுவார்கள். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள் விலகி எதிர்பாராத சுமூக முடிவுகள் உண்டாகும். குல தெய்வப் பிரார்தனை நிறைவேறும். நண்பர்கள், உறவினர்கள், சம்பந்திகள் வகையில் சந்தோஷமும் சகாயமும் ஏற்படும்.இல் வாழ்க்கை இனிமையாகும்.திருமணம் சம்பந்தமான முடிவுகள் நல்ல பலன் தரும். இதுவரை வேலை இல்லாமல் இருந்த வாழ்க்கை துணைக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
பள்ளி கல்லூரி, மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தி அதிக மதிப்பெண்ணையும் பாராட்டையும் பெறுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஆலோசனையும் புத்துணர்வு தரும் விதமாக இருக்கும். வேற்று மொழியை பிரதானமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும்.அடிக்கடி சளி பிடிக்கும். சிறு உடல் உபாதைகள் இருக்கும். கல்லூரி மற்றும் முதுகலை பட்டப் படிப்பு, ஆராய்சி கல்வி படிப்பவர்களுக்கு சாதகமான காலம். சிலர் உயர் கல்விக்கு வெளிநாடு அல்லது வெளி மாநிலம் செல்லலாம்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை மகிழ்விக்கும் விதமாகவே இருக்கும். சிலருக்கு கம்பெனியின் மூலம் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிடைக்கும். உடன் வேலை பார்ப்பவர்களிடையே நல்லிணக்கம் நீடிக்கும்.அரசு வேலையில் மெமோ வாங்கியவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும். பெற்றோர்களின் நல்லாசியும் ஆதரவும் கிடைக்கும். ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசா புக்தி நடப்பவர்களின் வயதிற்கும், தகுதிக்கும், திறமைக்கும், பூர்வ புண்ணியத்திற்கும் ஏற்ப பலன் பெறும் காலமாகும். சிறிய முயற்சிகள் பெரிய வெற்றியை தேடித் தரும். வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். தகவல் தொடர்பு, பத்திரிக்கை மற்றும் IT துறையில் உள்ளவர்களுக்கு ஏற்றம் உண்டு. அலைச்சல் மிகுந்த பயணம் அதிகரிக்கும்.வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும்.
தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதி ஏற்படும். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள். அரசின் மானியம் மற்றும் உதவி கிடைக்கும். அதன் மூலம் அதிர்ஷ்ட வருமானம் கிடைக்கும்.தொழில் பங்குச் சந்தை என வருமானம் வரும் வழியை கணக்கிட முடியாது. சிறிய முதலீட்டில் பெரிய வருமானத்தை தேடித் தருவார்.சிலருக்கு குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்யும் ஆர்வம் அதிகமாகும். தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு அல்லது வெளி மாநிலம் செல்ல நேரும்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கும் ஏற்ற காலம். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். பழைய கூட்டாளிகளிடமிருந்து வந்த மனக்கசப்பு மாறும்.சலிக்காமல் உழைத்து விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.
அரசியலில் மிகப் பெரிய பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும். பதவியுடன் பெரும் பணமும் கிடைக்கும்.ஆனால் நிறைய செலவு செய்ய நேரும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதியால் வம்பு வழக்கு வரலாம். குருவின் வக்ர காலங்களில் நிதானம் மற்றும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும்.கோப உணர்வு மிகுதியாகும்.வெளி உணவுகளை சாப்பிட்டு புட் பாய்ஸன் ஆகும் வாய்ப்பு உள்ளதால் வீட்டில் சமைத்த சூடான உணவை சாப்பிட வேண்டும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் கிடைத்த ஆதாயம், சலுகைகள், முன்னேற்றம் குறைவுபடும். எதிர்பாராத பண இழப்புகள் உங்களை துயரத்தில் ஆழ்த்தும்.சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மன சஞ்சலத்தை மிகுதிப்படுத்தும்.
வீடு மற்றும் தொழில் நிறுவனத்தில் குல தெய்வத்தின் படம் வைத்து வழிபட வெற்றி வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வீட்டில் தொடர்ந்து பணப்புழக்கம் அதிகரிக்க செவ்வாய் கிழமை மதியம் 3 மணி முதல் 4.30 வரையான ராகு வேளையில் ஒன்பது நெய் தீபம் ஏற்றி நரசிம்மரை வழிபட வேண்டும்.