

சுபசெய்திகளால் மனம் மகிழும் வாரம். ராசியில் உள்ள கேது பகவான் ஓரிரு மாதங்களில் ராசியை விட்டு விலகப் போகிறார். அதற்கான பலன்கள் தற்போதே தெரியத் துவங்கும். அரசின் நலத்திட்டங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். புதிய வியாபார யுக்திகளால் அதிக இலாபம் அடைவீர்கள். வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வார்கள். புத்திர பிராப்தம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு கம்பெனியில் வேலை கிடைக்கும். வீட்டுக் கடன் வட்டியில் அரசு சலுகையும் வட்டித் தள்ளுபடியும் கிடைக்கும். வட்டியையும், அசலையும் புரட்டிக்கட்டி வீட்டை கடன் என்ற முதலையிடம் இருந்து மீட்பீர்கள். படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் அரியர்ஸ் வைத்தவர்களும் தொடர்ந்து படித்து வெற்றி பெறுவீர்கள். கூலித் தொழிலாளிகளின் நிலமை சீராகும். பூர்வீகச் சொத்து தொடர்பாக சித்தப்பா உங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார். பேச்சில் நிதானத்துடன் இருந்து உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் சென்றால் நிம்மதி நீடிக்கும். திருட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். மஹாளய அமாவாசை அன்று முன்னோர்களின் நல்லாசிகளை பெறவும்.