

புத்தி சாதுர்யத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் தேக ஆரோக்கியம், மன அமைதி, பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். மன நிம்மதியை குறைத்த கடன் பிரச்சினை ஓரளவு குறையும். நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். புதிய கடன் வாங்கி பழைய கடன் அடைப்பீர்கள். விபரீத ராஜயோகத்தால் உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். 28.9.2026 அன்று காலை 10.16 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். யார் வம்பு தும்பும் வேண்டாம் என்று ஒதுங்கி நிற்பது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். மகாளய பட்ச காலங்களில் சிவனடியார்களுக்கு உதவவும்