சிம்மம்- 2026 வார ராசிபலன் 25.10.2026 முதல் 31.10.2026 வரை

உங்கள் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும்.
Simmam
Published on: 

சிம்மம்

நினைத்தது நிறைவேறும் வாரம். வார இறுதியில் அதிசாரமாக குரு பகவான் ராசிக்குள் நுழைகிறார். அங்கு கேது உடன் சேர்க்கை பெறுகிறார். உங்கள் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆன்ம பலம் பெருகும். பணத்தை எவ்வாறு சம்பாதித்து சேமிப்பது என்ற கலையை கற்றுக் கொள்வீர்கள். குறுக்கு சிந்தனையிலிருந்து விடுபட்டு நேர்மையாக செயல்படுவீர்கள். தெளிவான திறமையான பேச்சால் நல்ல வியாபார வாய்ப்புகளை அடைவீர்கள். தொழிலுக்கு புதிய பங்குதாரர் கிடைப்பார். நியாயமான கோரிக்கைக்கு உயர் அதிகாரி செவி சாய்ப்பார். அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பங்கு பத்திர ஆதாயம் உண்டு.விலை உயர்ந்த அழகு ஆடம்பரப் பொருள்களின் சேர்க்கை அதிகரிக்கும். 25.10.2026 அன்று இரவு 7.22 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆன்லைனில் பொருள் வாங்கி ஏமாறும் வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பௌர்ணமி அன்று திருமஞ்சனம் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com