சிம்மம்- வார ராசிபலன் 21.6.2026 முதல் 27.6.2026 வரை

நண்பர்களுடன் ஏற்பட்ட விரிசல் சீராகி ஆதாயம் உண்டாகும்.
Simmam weekly rasipalan
சிம்மம் வார ராசிபலன்
Published on

சிம்மம்

இழந்ததை மீட்கும் வாரம். பொதுவாக ஒரு ஜாதகத்தில் லாப ஸ்தானத்தில் சூரியன் நிற்பது தோஷ நிவர்த்தி ஆகும். தற்போது ராசி அதிபதி தன லாபாதிபதி புதனுடன் லாப ஸ்தானத்தில் நிற்பது சிம்ம ராசிக்கு இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் மீட்டுத் தரும் காலமாகும். தொழிலில் புதுமை புகுத்தி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுய ஜாதக பரிசீலனை செய்த பிறகு புதிய தொழில் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். நண்பர்களுடன் ஏற்பட்ட விரிசல் சீராகி ஆதாயம் உண்டாகும். வியாதிகள் குறைந்து நலமடைவீர்கள். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு விலகி நல்ல புரிதல் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு பயணங்கள் நன்மை தரும். புதிய பதவிகளால் மதிப்பு, கவுரவம் கூடும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சலால் ஆதாயம் அதிகரிக்கும். பெண்களுக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனையால் எதிர்கால கல்வி பற்றிய நல்ல முடிவு கிடைக்கும். வியாழக்கிழமை சித்தர்களை வழிபடுவது நல்லது.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com