

ஆரவரமான வாரம். வார துவக்கத்தில் ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி சூரியன் வார இறுதியில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் செல்கிறார். முக்கிய கிரகங்களின் நிலவரம் சிம்ம ராசிக்கு மிக மிக சாதகமாக உள்ளது. கிரகங்களின் சஞ்சாரம் உங்களை புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. சுப கிரகங்கள் மிகச் சாதகமாக இருப்பதால் மனநிம்மதி சந்தோஷம் அதிகரிக்கும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். சிலர் சொந்த தொழில் தொடங்கலாம். வேலையில் இருந்த பிரச்சிினைகள் முடிவுக்கு வரும், சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணத் தடை அகலும். உடல் நிலை சிறப்பாகவுள்ளது. 26.9.2026 அன்று காலை 5.33க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து ஹயக்கிரீவர் வழிபாடு செய்வது நன்று.