

சிம்மம்
தடை தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன லாப ஸ்தான அதிபதி புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மனதிற்கு நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும்.தைரியம் மிகுதியாக இருக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும்.நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும்.தொழில் கடன்கள் குறையத் துவங்கும். நீண்டநாளாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல் வாய்ப்பு உண்டாகும்.புத்திர பிராப்த்தம் ஏற்படும். சிலர் விருப்ப ஓய்வு பெறலாம்.குடும்ப சூழல் காரணமாக ஆரோக்கியம் காரணமாக கல்வியில் ஏற்பட்ட தடைகள் பாதிப்புகள் அகலும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும்.பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் வழங்கவும்.