சிம்மம்
எல்லோரும் எல்லாமும் பெற நினைக்கும் சிம்ம ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே இந்த மாதம் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லையும், அதனால் மருத்துவச் செலவும் ஏற்படும். அதேநேரம் குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவது யோகம்தான். போட்டிகளுக்கு மத்தியில் தொழில் வளர்ச்சியும் உண்டு. பொருளாதார நிலை உயரும். தசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் நன்மைகளை வரவழைத்துக்கொள்ளலாம்.
மிதுன - செவ்வாய்
தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய் என்பதால், இந்த காலகட்டத்தில் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். லாப ஸ்தானத்திற்கு செவ்வாய் வருவதால் என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் அதிக விலைக்கு விற்பனையாகி மகிழ்ச்சியை வழங்கும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். சகோதர ஒற்றுமை பலப்படும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். தொழிலில் புதியதாக முதலீடு செய்ய முன்வருவீர்கள்.
மகர - புதன்
உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நேர்முகத்தேர்வில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இந்த நேரம் புதிய கிளைத் தொழில் தொடங்கும் சூழ்நிலை உருவாகலாம். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதனை படைக்கும் நேரம் இது. கூட்டுத் தொழிலை, தனித் தொழிலாக செய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும்.
கும்ப - புதன்
தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் கல்யாணக் கனவுகள் நனவாகும். கடமையை சரிவரச் செய்து பாராட்டு பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வந்து திரும்பிச் சென்ற வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். வெளிநாட்டில் பணிபுரிவதற்காக நீங்கள் செய்த முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்ய எடுத்த முடிவு அனுகூலமாக இருக்கும். அதே நேரம் உடன்பிறப்புகளுடன் இணைந்து புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
குரு வக்ர நிவர்த்தி
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு, தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அந்த வகையில் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான குரு, வக்ர நிவர்த்தியாவது நன்மைதான். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரும். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பழைய பாக்கிகளை தீர்க்க ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் இருந்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் லாபம் தரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். ஆயினும் பிள்ளைகளால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு, கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உற்சாகத்தைத் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்ற விருப்பம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ - மாணவி களுக்கு நண்பர்களால் நன்மை கிடைக்கும். பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிக விரயம் உண்டு. குடும்பச்சுமை கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 14, 20, 21, 23, 24, பிப்ரவரி: 4, 5, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.