

நிர்வாகத் திறமை மிகுந்த சிம்ம ராசியினரே... இதுவரை ராசிக்கு 12ல் நின்று உச்ச கட்ட விரயத்தை கொடுத்த உச்ச குருபகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக சிம்ம ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக பலன் தருவார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்.
சிம்ம ராசிக்கு 5,8ம் அதிபதியானகுருபகவான் ராசியில் சஞ்சரிப்பது அற்புதமான யோக பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உங்களின் மனதடுமாற்றம் நீங்கி விவேகத்துடன் கூடிய வேகம், நிதானம், தைரியம் மற்றும் தெம்பு உங்களுக்குள் குடிபுகும். உங்களை ஆட்டுவித்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? நம்பிக்கையானவர்களை எப்படி தேர்வு செய்வது? யாரை நம்புவது? தார்மீக முறையில் சம்பாதிப்பது எப்படி போன்ற அனைத்து ஞானத்தையும் குருபகவான் வழங்கப் போகிறார். ஆன்மீக கிரகமான குரு சட்டத்திற்கு உட்பட்டு எல்லோரும் அங்கீகரிக்கும் விதத்தில் பொருள் தருவார். அதிர்ஷ்டம் உழைப்பின் மூலம் முறையான, நேர்மையான வழியில் கதவை தட்டும். அளவான நியாயமான ஆசைகள் அனைத்தும் பலிக்கும்.பெரும் வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது.குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி பெருகும்.
வெளியில் சொல்ல முடியாது தவித்த பல பிரச்சினைகள் தானாக தீரும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கும். திருமணம் தடை பட்டவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.குழந்தை பாக்கியம் விரும்பியவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்கும். தடைபட்ட வாடகை வருமானம் வரலாம். ஜென்மத்தில் நிற்கும் குரு தனது சிறப்பு பார்வையால் 5,7,9 இடங்களை புனிதப் படுத்தப் போகிறார். இந்த ஜென்மத்தில் பாக்கிய ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஒருங்கே இணைந்து பலன் தரும் காலம். அதிர்ஷ்டம் கை கொடுக்கும் நேரம். மனசாட்சிக்கு புறம்பாக செய்த தவறான செயல்களை நிறுத்துவார்கள். நிர்வகித்து வரும் பதவியை சட்டத்திட்டங்களுக்கு கட்டுபட்டு முறையாக வழிநடத்துவார்கள். பிள்ளைகளின் அன்பும்,ஆதரவும் கிடைக்கும். திருக்கோவில்களைச் சுற்றி தொழில் ஸ்தாபனம் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் மிகுதியாக இருக்கும். குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று குல வழக்கப்படி பூஜை செய்யும் பாக்கியம் கிடைக்கும்.கலை துறையினருக்கு ஏற்றம் மிகுதியாக இருக்கும். குழந்தைகளின் ஆயுள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குழந்தைகளின் மதி நுட்பம் உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். தவறான காதல் நட்பில் இருந்த உங்கள் குழந்தை மனம் மாறி குல கவுரவத்தை காக்கும் . இளவயதினருக்கு பெண் குழந்தை பிறக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு பேத்தி பிறப்பாள். மனதை மகிழ்விக்கும் சுப நிகழ்வுகள் அனைத்து நடக்கும்.முன்னோர்களின் பரம்பரை வியாதிகளான சுகர்,பிரஷர், கை, கால் மூட்டு வலி உங்களை வந்தடையும் நேரம்.
பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஐந்து பத்துக்கு அல்லாடிய நிலை மாறும். தான தர்மம் செய்யக்கூடிய வகையில் வருமானம் உயரும். ஏலச்சீட்டு நகை சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். விட்டு விலகிச் சென்ற சொந்தங்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.கடன் தொல்லையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.பேச்சை மூலதனமாக கொண்ட வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், மார்க்கெட்டிங் , உணவுத் தொழில், நல்ல ஏற்றம் பெறும்.ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசா புக்தி இருப்பவர்களுக்கு என்றைக்கோ மலிவு விலைக்கு வாங்கிப் போட்ட நிலம் விலை உயர்ந்து இப்போது விலையாகும். வீடு,வாகன யோகம் பலிதமாகும்.
உங்களின் தோற்றம் பொலிவு பெறும். மனதில் அமைதி குடிகொள்ளும். அழகான நீங்கள்ஆடம்பரமாக உங்களை அலங்கரிக்க தனி கவனம் செலுத்து வீர்கள்.கணவரின் அன்பும் பிள்ளைகளின் பாசமும் உங்களை இல்லச் சிறையில் அடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும்.பணவரவு அதிகரிக்கும்.பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியும் உருவாகும். பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். ஓய்வெடுக்க நேரமில்லாது உழைக்க வேண்டியது இருக்கும். பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும்.பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம் .ஆன்மீக வாதிகள் , குருமார்கள், துறவிகள் இவர்களின் ஆசி கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.
அஷ்டமச் சனி மாணவர்களுக்கு கவனச் சிதறலையும் அசதியையும், சோம்பலையும் கொடுப்பார்கள். ஐந்து மற்றும் ஒன்பதாமிடத்தில் பதியும் குருபார்வை உங்களைக் காக்கும். மாணவர்கள் சாமர்த்தியமும் அறிவுத் திறமையையும் தேர்வில் வெளிப்படும்.உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். இடமாற்றங்கள் ஏற்படலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரும்.உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல் வாய்ப்பு உண்டாகும். படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நீங்கள் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். வழக்கத்தை விட அதிக நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொழில் மாற்றமும் இட மாற்றமும் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் ஆதாயம் அடைவார்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். ஜனன கால ஜாதகத்தில் 9, 12ம் அதிபதியின் தசை அல்லது புத்தி நடந்து கொண்டு இருந்தால் வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். குருவின் வக்ர காலங்களில் நன்மையும் தீமையும், கலந்தே நடக்கும்.திட்டமிடுதல் ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதையும் திட்டமிட்டபடி செய்ய முடியாது.வீண் விரயங்களும் மனக் கவலையும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனை யாக உருவாகும். முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். புதிய கடன் உருவாக வாய்ப்புகள் அதிகம். அதனால் மன வருத்தப்படும் சூழ்நிலை உருவாகும்.
பங்குதாரர்களிடம் இணக்கம் அதிகமாகும்.நல்ல தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.புதிய நண்பர்கள்,வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.செய்தி மற்றும் பத்திரிக்கைக் துறையினருக்கு புத்தியை தீட்டி சம்பாதிக்க உதவும் காலம். ஊடகங்களில் பணிபுரிவர்கள் ஏற்றம் பெறும் காலம். இக்கால கட்டத்தில் தொழில் புரியும் பலருக்கு மிகுதியான லாபம் ஏற்படும். மிகக் குறிப்பாக அதிக அளவில் முதலீடு போடும் கட்டுமானத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு வருமானம் பல மடங்கு அதிகமாகும். ஜனன கால ஜாதகத்தில் 2,5, 11ம் அதிபதிகளின் தசை நடப்பவர்கள் பெரிய பாதிப்பைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லை. தொழிலில் தடாலடி மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். பணியாளர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். முக்கிய முடிவுகளை சுய ஜாதகத்தைப் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்.
5.12.2026 வரை ராசியில் உள்ள கேதுவால் மனக் குழப்பம்,மனபயம் மற்றும் திட்டமிடுதலில் தவறுகள் ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அரசியலில் முக்கிய பங்கு, பதவி வகிப்பீர்கள். நீங்கள் விரும்பிய பதவி உங்களை தேடி வரும். பட்டங்களும், பதக்கங்களும் வந்து குவியும். எதிர் கட்சியினர் உங்களுக்கு அடங்கி போவார்கள். குருபகவான் வக்ரம் அடையும் காலத்தில் நாற்காலி ஆடும் என்பதால் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பதவியின் தன்மையறிந்து பொறுப்பாக இருப்பது அவசியம்.
சனிக்கிழமை் சனி ஓரையில் சிவ தரிசனம் செய்துவர தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் அகலும். துப்பறவு தொழிலாளிகள், தினக்கூலிகள், கடினமான வேலை செய்யும் கீழ் நிலைத் தொழிலாளிகளை தரக்குறைவாக பேசக்கூடாது.பேரம் பேசக்கூடாது. உழைத்த கூலியை உடனடியாக கொடுக்க வேண்டும்.