மிதுனம்- 2026 வார ராசிபலன் 16.8.2026 முதல் 22.8.2026 வரை

புத்திர தோஷத்தினால் நீண்ட காலமாக தடைபட்ட புத்திர பாக்கியம் கைகூடும்.
Mithunam
மிதுனம்
Published on

மிதுனம்

வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் அகலும். ராசியில் 6,11-ம் அதிபதி செவ்வாய் சஞ்சரிக்கிறார். எண்ணங்கள் விருப்பங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளது. சிலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாழ்வார்கள். சிலர் பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்குவீர்கள். இழுபறியாக இருந்து வந்த குடும்ப சொத்து விவகாரம் சட்டத்தின் உதவியை நாடவைக்கும். புத்திர தோஷத்தினால் நீண்ட காலமாக தடைபட்ட புத்திர பாக்கியம் கைகூடும். குறைந்த முதலீட்டில் எளிய உழைப்பில் நல்ல வருமானம் வரக்கூடி நிலையான வருமானத்திற்கான புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வழக்கறிஞர், அரசியல் வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். தாய், தந்தையின் அன்பும் ஆசிர்வாதமும் உங்களை நல்ல முறையில் வழி நடத்தும். கருட பஞ்சமி அன்று குங்கும அபிஷேகம் செய்து சர்ப்ப வழிபாடு செய்யவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com