

அதிர்ஷ்டம் நிறைந்த வாரம். ராசி அதிபதி புதன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பஞ்சங்கள் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். மனோ தைரியம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மிகுதியான பொருள் வரவு இருக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். சுய தொழிலில் விருத்தி உண்டாகும். குடும்ப உறவுகளுடன் ஒட்டாமல் வாழ்ந்தவர்கள் உறவுகளின் அவசியத்தை புரிந்து கொள்வார்கள். அடிப்படை தேவைக்கு திணறியவர்கள் தாராள தன வரவால் தன்நிறைவு அடைவார்கள். தம்மைச் சார்ந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். வீடு கட்டுதல், மற்றும் வாங்குதல் தொடர்பான பணிகள் தடையில்லாமல் நடந்து முடியும். வங்கியில் கடன் உதவி பெறுவதற்கு ஏற்ற காலம். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். அடமான நகைகள் வீடு வந்து சேரும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.பழைய கடன்களைத் தீர்க்க திட்டம் தீட்டிச் செயல்படுவீர்கள். சேமிப்புகள் உயரும்.மஹாளய அமாவாசை அன்று வெண்பொங்கல் தானம் வழங்கவும்.