மிதுனம்- 2026 வார ராசிபலன் 20.9.2026 முதல் 26.9.2026 வரை

தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
Mithunam
Published on

மிதுனம்

எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும் வாரம். வாரத்தின் முற்பகுதியில் உச்ச பலம் பெற்ற ராசி அதிபதி புதன் வார இறுதியில் பூர்வ புண்ணிய ஸ்தானம் சென்று சுக்கிரனுடன் இணைகிறார். உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் உண்டாகும். திருமண முயற்சி வெற்றி தரும். புத்திர பிராப்தம் உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். மாமனாரால் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அழகு, ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகமாகும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உயர் கல்வி கற்பதில் நிலவிய தடை, தாமதங்கள் தாமாக விலகும். ஆரோக்கியத்திற்கு சற்று அதிக முக்கியத்துவம் தருவது நல்லது. 21.9.2026 அன்று இரவு 11.15 முதல் 23.9.2026 அன்று இரவு 9.57 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில், வேலையில் அவசரம் காட்டாமல் சிந்தித்து செயல்படவும். பௌர்ணமி அன்று விரதம் இருந்து மீனாட்சி அம்மனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com