மிதுனம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை

பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.
Mithunam
Published on: 

மிதுனம்

பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மறையும் வாரம். 5,12ம் அதிபதி சுக்ரன் வக்ர கதியில் நீச்சம் பெறுவதால் உச்ச பலன் பெறுகிறார். லாட்டரி, பங்குச் சந்தை வணிகம் உத்வேகம் பெறும். அரசியல் ஆதாயம் உண்டு. புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு நிச்சயமாக கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். நன்மைகள் இரட்டிப்பாகும். பணபலம் அதிகமாகும். தொட்டது துலங்கும். நினைத்த காரியம் வெற்றியைத் தரும். போட்டி பந்தயங்களில் அமோக வெற்றி வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். போட்டி பந்தயங்கள் வெற்றி தரும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். ராகு தொழில் ஸ்தானத்தை விட்டு விலகும் நேரம் என்பதால் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். கடன்கள் அடைபடும். எதிரிகள் தொல்லை ஒழியும். குடும்பத்திற்கு வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். தீபாவளி பண்டிகைக்கு ஆடம்பரமான துணிகள் பொருட்கள் வாங்குவீர்கள். திருமண முயற்சிகளில் திருப்புமுனை உண்டாகும். மனதில் அமைதியும், ஆனந்தமும், நிம்மதியும் குடிபுகும். மகிழ்ச்சியை அதிகரிக்க தீபாவளி பண்டிகைக்கு உணவு உடை தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X