

மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். மதிப்பு மிக்கவர்களின் நட்பும் அவர்களால் அனுகூலமும் உண்டாகும். சிலர் குறுகிய கால ஒப்பந்த அடிப்படை தொழில் அல்லது வேலைக்காக வெளிநாடு செல்லலாம். கருத்து வேறுபாட்டால் தடைபட்ட முன்னோர்களின் பூர்வீகச் சொத்துக்கள் பிரிக்கப்படலாம். சிலருக்கு சுபவிரயமாக சொத்து சேரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். தடைபட்ட நீண்ட நாள் முயற்சிகள் பேச்சு வார்த்தையில் சுமூகமாகலாம். வாழ்வில் செட்டில் ஆகுவதற்கு தேவையான நல்ல வழிகள் தென்படும். விரயத்தை வீடு, வாகனம் வாங்குவது, பிள்ளைகளின் திருமணச் செலவு, நகை வாங்குவது, எதிர்கால சேமிப்பு திட்டங்களில் சேமிப்பது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது என சுப விரயமாக மாற்றியமைப்பது புத்திசாலித்தனம். சிலர் வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கப் பெற்று இடம் பெயரலாம். நவராத்திரி காலங்களில் மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து அம்பிகை வழிபாடு செய்யவும்