மிதுனம்: ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2026

பூர்வீக சொத்துக்கள் மூலம் திடீர் அதிர்ஷ்டம் யோகம் தேடி வரும்.
மிதுனம்
மிதுனம்
Published on: 

மிருதுவான மிதுன ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்குள் கேது பகவானும் அஷ்டம ஸ்தானத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். குருபகவான் கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.

அஷ்டம ஸ்தான ராகுவின் பொது பலன்கள்

பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வரும் போது நன்மை செய்யும் என்பது ஜோதிட விதி. அதாவது கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜ யோகம்.தான் நின்ற பாவக பலனை மிகைப்படுத்தும் சக்தி படைத்த ராகு ஆயுளை அதிகரிப்பார்.வெளிநாட்டு வேலை கிடைக்கும். பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சில சங்கடங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு.வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்குவீர்கள். தொழில் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். இரண்டு எட்டாம் இடத்துடன் ராகு கேதுக்கள் சம்மந்தம் பெறும் போது அடுத்தவரின் குறுக்கீடு மிகுதியாகும் உங்களுக்கு சம்பந்தமில்லாத விசயத்தில் தலையிட வேண்டாம். திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் திடீர் அதிர்ஷ்டம் யோகம் தேடி வரும்.கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிலர் அதிர்ஷ்டத்தை நம்பி ஏமாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு அதிர்ஷ்டப் பொருள் பணமும் கிடைக்கலாம்.

அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(5.12.2026 முதல் 12.4.2027 வரை)

மிதுன ராசிக்கு 6,11ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.இதுவரை எதிர்பார்த்த கடனுதவி இப்பொழுது கிடைக்கும். உரிய வைத்தியத்தால் நோய் தாக்கம் குறையும்.திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும். விவசாயிகளுக்கும், கால்நடை வளர்பவர்களும் ஏற்ற காலம். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். எனினும் பிடிக்காத வேலையில் பிடிக்காத நபர்களுடன் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.கலைத்துறையினருக்கு பெயரை நிலை நிறுத்தும் வகையிலான வாய்ப்புகள் தேடி வரும். நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்வது மிக அவசியம்.

திருவோணம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(13.4.2027 முதல் 18.12.2027 வரை)

மிதுன ராசிக்கு தன ஸ்தான அதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் நல்லதோ, கெட்டதோ கோட்சார ராகு சம்மந்தம் இரண்டாம் இடத்திற்கு இருந்தாலே சம்மந்தம் இல்லாத ஒரு நபரின் குறுக்கீடு உங்களுக்கு வரும்.ஒற்றுமையாக வாழ்பவர்களை பிரிப்பார். சந்தோசமாக வாழும் தம்பதிகளிடையே அடுத்தவர் குறுக்கீட்டால் சங்கடங்கள் அதிகரிக்கும். ஏற்கனவே பிரிந்து வாழும் தம்பதியினர் மூன்றாம் நபரின் குறிக்கீட்டால் சேர்ந்து வாழ்வார்கள். தன வரவு மகிழ்வை தரும். லாபம் ஒன்றுக்கு இரண்டாகும். பணம் பொருள் வரும்.பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். இளம் பருவத்தினருக்கு திருமண வாய்ப்பு கை கூடி வரும். தொழில் ஞானம்,

உத்திராடம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(19.12.2027 முதல் 24.6.2028 வரை

மிதுன ராசிக்கு முயற்சி ஸ்தான அதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் வருமானமும் வசதியும் உயரும். இதுவரை நிலவிய பொருளாதார நெருக்கடிகள் விலகும்திட்டமிட்டு செயல்படுவீர்கள். ஆன்லைன் வர்த்தகம் நல்ல பொருளாதார உயர்வை தரும். அதே போல் ஊடகம், தகவல் தொடர்பு துறையில் பணி புரிபவர்களின் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் அனுசரனை உண்டு. வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். சிலர் உடன் பிறந்தவர்களுக்காக சொத்து, சுகத்தை விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். இதனால் செயல்களில் வெற்றி உண்டாகும்.

தன ஸ்தான கேதுவின் பலன்கள்

உங்களின் மனோநிலையிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படும். பேச்சுத் திறமை, லௌகீக நாட்டம் அதிகரிக்கும்.தன வரவில் ஏற்ற இறக்கமான நிலை வரலாம். தேவையற்ற பேச்சுக்களை குறைத்தால் குடும்பத்தில் சலசலப்பு குறைந்து கலகலப்பு அதிகமாகும்.பிழைப்பிற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறி வெளிமாநிலம் அல்லது வெளி நாட்டிற்கு சென்று தங்க நேரும். பூர்வீகச் சொத்து கை விட்டுப் போகும் அல்லது பூர்வீகச் சொத்தை விற்று எல்லா கடனையும் அடைத்து முடித்து பூர்வீகத்தைவிட்டு வெளியேற நேரும். ஜனன காலத்தில் ஒன்பதாமிடம் அல்லது ஒன்பதாம் அதிபதி சுபத் தன்மையுடன் இயங்கினால் குலத்தொழிலின் புதிய தொழில் கிளைகளை வெளியூர் அல்லது வெளிநாட்டில் ஆரம்பிப்பீர்கள்.பொன் பொருள் சேரும். வக்கீல்கள், ஜோதிடர்கள், நிதித்துறை, நீதித்துறை, ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும்.உணவுக் கட்டுப்பாடு அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். குடும்பத்தில் சங்கடங்கள் குறைய பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது.

ஆயில்யம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(5.12.2026 முதல் 14.8.2027 வரை)

மிதுன ராசியின் அதிபதி மற்றும் சுக ஸ்தான அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் மனம் அமைதியை விரும்பும். விரக்தி மனப்பான்மை அதிகரிக்கும்.எதிலும் விருப்பத்துடன் செயல்படும் ஆர்வம் குறையும். தன்னம்பிக்கை தைரியத்தை வளர்த்துக் கொண்டு காரியம் சாதிக்க வேண்டிய நேரம். சில போராட்டங்களை சந்தித்தாலும் வெற்றி உங்களுக்கு நிச்சயம்.அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும். பூர்வீகச் சொத்து மீதான வம்பு, வழக்குகளின் தீர்ப்புகள் சாதகமாகும். அனைத்து விதமான தொழில் மற்றும் உத்தியோகத்தில் உள்ளவர்களின் எண்ணங்களும், விருப்பங்களும் ஈடேறும்.சுப விரயங்கள், சுப விசேஷங்கள் நடைபெறும். திருமணம், குழந்தை பிறப்பில் நிலவிய தடைகள் அகலும்.

பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(15.8.2027 முதல் 22.4.2028 வரை)

மிதுன ராசிக்கு 8, 9ம் அதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் மிதுன ராசியினருக்கு இது ஒரு சுமாரான காலம். பெரும்பாலான விஷயங்கள் முட்டுக்கட்டை போட்டார் போல் முடங்கி விடும். இந்த ஒன்றரை வருடங்களில் உங்களுக்கு நடக்கக் கூடிய நன்மைகள் குறைவாக இருக்கும். அதற்காக மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுமோ என்று அச்சப்படத் தேவையில்லை. இதுவரை வரை இழுத்தடித்த வம்பு வழக்குகளை பணத்தை கொடுத்தாவது ஜெயிக்க வேண்டும் என்ற ஆதங்கம் மேலோங்கும். இதுவரை உங்களுக்கு சேம் சைடு கோல் போட்ட உங்கள் குடும்ப உறவுகள் பாராமுகம் காட்டுவது உங்களுக்கு மன வருத்தம் தரும். ஒரு சிலருக்கு கிடைத்த உதவி தடைபடும்.

புனர்பூசம் நட்சத்திர சஞ்சார பலன்கள்

(23.4.2028 முதல் 24.6.2028 வரை)

மிதுன ராசிக்கு ஏழு பத்தாம் அதிபதியான குருவின் புனர்பூச நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் உழைக்கும் ஆர்வம் நிறைந்த பழைய கூட்டாளி விலகலாம். குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதில் கில்லாடியான ஒரு புதிய தொழில் கூட்டாளியை சேர்த்து விடுவீர்கள்.குடும்ப உறவுகளுடன் சாதகமான போக்கு தென்படும். உங்களுக்கு மன அமைதியைத் தரும் நண்பர்களின் சந்திப்பால் மன நிம்மதி கூடும்.அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட எல்லைத் தகராறு பேச்சுத் தகராறு முடிவுக்கு வரும். பெண் கள் விலை உயர்ந்த பொருட்களை யாருக்கும் இரவல் கொ டுக் கக்கூ டாது.திரு மண த்திற்கு நல்ல வரன் அமை யும். அடுத்த ஒன்றரை வருட காலத்தில் வாழ்கையில் திருப்பு முனை யான பல நல்ல சம்பவங்கள் நடக்கப் போகிறது.

பரிகாரம்

சிவனின் திருமேனிக்கு சந்தனக்காப்புப் பொருத்திக் குளிர்வித்தால் உங்கள் உள்ளம் குளி ர்ந்து மன பாரம் குறை யும்.வெள்ளிக் கிழமைகளில் அன்று கோ பூஜையில் கலந்து கொண்டு பசு மற்றும் விலங்கு களுக்கு உணவிட குடும் பத்தில் நிம்மதி கூடும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X