மிதுனம்- 2026 ஐப்பசி மாத ராசிபலன்

புகழ்பெற்றவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர்.
mithunam
Published on: 

மிதுன ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பஞ்சம ஸ்தானத்தில் சூரியன். சுக்ரனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இதனால் 'புத ஆதித்ய யோகமும். 'புதசுக்ர யோசு'மும் ஏற்படுகிறது. எனவே மாதத் தொடக்கம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். புகழ்பெற்றவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர். ஆயினும் மாதக்கடைசியில் அஷ்டமத்தில் ராகுவும். தன ஸ்தானத்தில் கேதுவும் அடியெடுத்து வைக்கிறார்கள். இதன்விளைவாக எண்ணற்ற மாற்றங்கள் வந்துசேரும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. சர்ப்ப தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

சிம்ம - குருவின் ஆதிக்கம்

மாதத் தொடக்கத்தில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கும் குரு பகவான். ஐப்பசி 3-ந் தேதி (20.10.2026) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் ராசிக்கு வக்ர கதியில் செல்லப் போகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சப்தம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கல்யாணக் கனவுகள் நனவாகும். இல்லறம் நல்லறமாக அமைய வழிபிறக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் மணிவிழாக்கள், கட்டிடத்திறப்பு விழாக்கள் என ஒன்றன் பின் ஒன்றாக சுபகாரியங்கள் நடைபெறும்.

குருவின் பார்வை 9, 11 ஆகிய இடங்களில் பதிவதால் தந்தை வழி உறயில் நெருக்கம் அதிகரிக்கும். அவர்களின் ஆதரவோடு தொழிலை பலப்படுத்திக்கொள்வீர்கள். நீடித்த நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் திருப்தி ஏற்படும். செய்யும் தொழிலை மேம்படுத்த எடுத்த முயற்சி இப்பொழுது பலன் தரும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும்.

ராகு-கேது பெயர்ச்சி

உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், 13.11.2026 அன்று 8-ம் இடமான ஆயுள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். அஷ்டமத்தில் ராகு அடியெடுத்து வைப்பது நல்லதல்ல. என்றாலும் அதற்குரிய வழிபாடுகளை மேற்கொண்டால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. சுமார் ஒன்றரை வருட காலங்கள் அங்கிருந்து கொண்டு பாதசார அடிப்படையில் பலன்களை வழங்குவார். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது. மனப்பயம் அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனை வந்து கொண்டேமிருக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியிலும் ஆதாயம் குறைவாகவே இருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

2-ம் இடம் எனப்படும் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் குடும்பச்சுமை கூடும் வருமானம் எவ்வாவு வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாவது அரிது. பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகையால் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மிகச் சுற்றுலாக்கள் உண்டு. அருகில் இருப்பவர்களை அனுசரித்துக் கொள்வதன் மூலம் ஆதாயம் கிளடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். நிசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வின் காரணமாக மாற்றம் வரும். உறயினர்களுக்கு நீங்கள் என்றைக்கு உதவி செய்தாலும் அவர்கள் நன்றி காட்டுவது சந்தேகம்தான்.

வியாபாரம்

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு போட்ட திட்டங்கள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் ளவர்களுக்கு இடமாற்றம் உறுதியாகும். கலைஞர்களுக்கு முயற்சி அதிகம் தேவை. மாணவ மாாயிகளுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை பெண்களுக்கு வரவைக் காட்டிலும் செலவு கூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com