பார்த்தவுடன் பாசமாகப் பழகும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு. சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து புதன் சஞ்சரிப்பதாலும், குருவின் பார்வை உங்கள் ராசிநாதன் மீது பதிவதாலும் நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும்.
குரு வக்ரம்
ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ரம் அடைகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது நன்மைதான். சுபச் செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். துணிந்து எடுத்த முடிவுகளில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நீண்ட நாட்களாக செயல்படுத்த முடியாத சில திட்டங்களை இப்பொழுது செயல்படுத்துவீர்கள்.
வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்கள் நடைபெற வழிபிறக்கும். வியாபார விருத்தி உண்டு. தொல்லை தந்தவர்கள் விலகுவர்.
சனி - செவ்வாய் பார்வை
கடகத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். சனி மீது அவரது பார்வை பதியும் பொழுது உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
ஒரு சிலருக்கு ஊர் மாற்றம் வரலாம். ஊதிய உயர்வுடன் வரும் மாற்றங்களை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். வெளிநாட்டு வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைய வாய்ப்பு உண்டு. மண், பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும்.
மகர - சுக்ரன்
கார்த்திகை 18-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி 8-ல் சஞ்சரிப்பது யோகம்தான். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
கொடுக்கல் - வாங்கல் சுமுகமாக இருக்கும். வாரிசுகளாக இருக்கும் குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்களில் பிரச்சினைகள் தலைதூக்கும்.
செவ்வாய் வக்ரம்
கடக ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், கார்த்திகை 18-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 6-க்கு அதிபதி வக்ரம் பெறுவதால் உத்தியோகத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். உயர்ந்த மனிதர்களிடம் பகை உருவாகும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் செய்யும் முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.
தேக ஆரோக்கியம் சீராக, மாற்று மருத்துவம் கைகொடுக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். என்றாலும், வரவைக் காட்டிலும் செலவு கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்துசேரும்.
மாதத்தின் மையப்பகுதியில் கலைஞர் களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவி களுக்கு, ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண் களுக்கு வருமானம் திருப்தியாக இருந்தாலும், விரயங்கள் அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில் சுபச் செலவை மேற்கொள்ளுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
நவம்பர்: 21, 22, 26, 27, டிசம்பர்: 8, 9, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.