

மிதுன ராசிக்கு இதுவரை இரண்டாமிடமான தன ஸ்தானத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக முயற்சி ஸ்தானமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார்.
இதனால் மிதுன ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம். அதிசார, வக்ரகுருவின் பொது பலன்கள் மிதுன ராசிக்கு 7,10ம் அதிபதியான குரு பகவான் அதிசாரமாக சகாய ஸ்தானத்திற்கு செல்கிறார். இது தைரியம்,தன் நம்பிக்கை,சகோதரன் ஸ்தானமாகும். 7, 10ம் அதிபதியான குரு பகவான் மூன்றாமிடத்திற்குச் செல்வது சிறப்பு. மூன்றாமிடம் என்பது உப ஜெய ஸ்தானம். வெற்றிக்கு வலு கூட்டுவது மற்றும் வெற்றி மேல் வெற்றியைத்தருவது.
அந்த வகையில் மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்திற்கு வரும் குருபகவான் உங்களுக்கு தைரியம்,தன் நம்பிக்கையத் தருவார். உங்களின் முயற்சிகளில் வெற்றியைத் தருவார்.அனைத்து எண்ணங்களும் பலிதமாகும். சிந்தனை, செயல்திறன் அதிகரிக்கும்.
தொட்டது துலங்கும். எடுக்கும் தீர்மானங்கள் சரியாக இருக்கும். பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும். இடப்பெயர்ச்சி செய்ய நேரும்.வீடு மாற்றம்,வேலை மாற்றம் என உங்களின் நல்வாழ்விற்கான அனைத்து மாற்றங்களும் நடக்கும். சகோதரத்தால் ஆதாயம் உண்டு. உங்கள் இன,மத அமைப்புகளில் முதன்மைப் பதவியும் கெளரவமும் கிடைக்கும்.நான்காம் அதிபதி குரு மூன்றில் வருவதால் ஒய்வெடுக்க நேரம் இல்லாமல் அதிக நேரம் உழைக்க நேரும்.சுக போகங்களை அனுபவிக்க முடியாது.
வீட்டில் தங்கும் நேரம் குறைவாக இருக்கும்.அண்டை அயலார்களிடைய நிலத்தகராறு, எல்லை பிரச்சனை வரும்.சொத்துப் பத்திரம் மற்றும் ஆவணங்கள் தொடர்பான மனக்கசப்பு அதிகரிக்கும்.உங்களின் சொத்து, சுகத்தை சகோதரருக்கு விட்டுக் கொடுக்க நேரும்.தாயின் சப்போட் உங்களின் சகோதரருக்கே கிடைக்கும்.குருவின் பார்வை பதியும் இடங்களான 7,9,11ம் இடங்கள் மூலம் பல்வேறு பாக்கிய பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
திருமணத்தடை அகலும். திருமணக் கனவு நனவாகும். சிலர் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்துவார்கள்.ஆக கெட்டி மேளச்சத்தம் கேட்கப் போவது உறுதி.சிலருக்கு இரண்டாவதாக இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்.
உபத்திரத்தைக் கொடுத்து வந்த பழைய தொழில் கூட்டாளியின் விலகல் நிம்மதி தரும்.புதிய திறமையான பங்குதாரரின் அறிமுகம் மகிழ்ச்சியைத் தரும்.பெரிய மனிதர்களின் நட்பும் அறிமுகம் உதவியும் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம் வெற்றிப் பாதையைக் காட்டும்.பாக்கிய பலத்தால் தாத்தா, பாட்டியாவார்கள்.
குரு கடாட்சத்தால் குலம் தழைக்க ஆண் வாரிசு கிடைக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தந்தை,மகள் உறவு மேலோங்கும்.அறியாமையால் குடும்ப பெரியர்களிடம் சாபம் வாங்கியவர்கள் குருவின் பார்வை ஒன்பதாமிடத்திற்கு இருக்கும் இந்த காலத்தில் இயன்ற ஆடை தானம் தந்து ஆசி பெற பாக்கிய பலம் கூடும்.வீட்டுப் பெரியவர்கள் உயிரோடு இருக்கும் போது முறையாக பராமரிக்காமல் துன்புறுத்தி விட்டு இறந்த பிறகு அவர்களை வழிபடுவதால் எந்த பயனும் கிடையாது.வாழும் காலத்தில் ஒருவரின் ஆசியைப் பெறுபவர்களின் ஏழு தலைமுறையினர் எந்தக் குறையுமின்றி வாழ்வார்கள்.
தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும்.ஏதாவது வழியில் பணம் வந்து கொண்டே இருக்கும்.கடன் சுமை குறையும்.எதிர் கால வாழ்க்கையை நினைத்து பயந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.வராக் கடன்கள் வசூலாகும்.
அடமானத்திலிருக்கும் நகைகள் மீண்டு வரும்.கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். யாருக்கேனும் ஜாமின் போட்டு தேவையில்லாத கடன் மற்றும் வம்பு, வழக்கில் மாட்டலாம்.சம்பந்த மில்லாத புதிய எதிரிகள் தோன்றுவார்கள்.வராக்கடன் வசூலாகும்.கடன் பாதிப்பு குறையும். திருமணத் தடை அகலும்.குருவின் ஆசியோடும் பெரியோர்களின் ஆசியோடும் ஆடம்பரமாக சீரோடும்,சிறப்போடும் திருமணம் நடக்கும்.மிகுந்த யோகமும் அதிர்ஷ்டமும் கூடிய திருமணம் நடக்கும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தை நன் முறையில் வழி நடத்த வேண்டிய பொறுப்பை உணர்ந்து பொறுமையாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் நடைபெறும். உங்களின் செயல்பாடுகள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும்.வீட்டிலும் அலுவலகத்திலும் உங்கள் சேவைகள் அனைவராலும் பாராட்படும்.
மிக முக்கிய அரசின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் பெண்கள்,சீருடைப் பணியாளர்களின் புகழ் பரவும். பல பெண்கள் புதிய சுய தொழில் தொடங்கி சாதனை படைப்பார்கள். குழந்தைகளால் மன நிம்மதி ஏற்படும்.குழந்தை பாக்கியம் உண்டாகும்.எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடிவரும். குல தெய்வ அனுகிரகம் இரட்டிப்பாகும். புகழ், அந்தஸ்து, கெளவரம் தரும் பதவிகளைப் பெற்றுத் தருவார். ஜோதிட,சாஸ்திர ஞானம் மிகுதியாகும்.புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும்.தகவல், தொடர்பு ஊடகங்களில் உங்களின் பெயர் பிரபலமாக பேசப்படும்.
ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகள் காலம் தாழ்த்தியே பள்ளியில் சேர முடியும்.சில குழந்தைகள் பள்ளியை மாற்ற நேரும்.எதிர்கால கல்வியைத் திட்டமிடுதலில் இருந்த குழப்பங்கள் விலகும்.டிவி, மொபைல் போன்ற வற்றிலிருந்து விடுபடுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் கலந்து வெற்றி பெறுவீர்கள். விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ளவர்கள், சாதிக்க களம் தேடும் இளைஞர்களுக்கு சாதகமான காலம்.உயர் கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும்.சிலர் உயர் கல்லூரி படிப்பிற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.
உத்தியோகத்தில் சாதகமும் பாதகமும் கலந்து நடக்கும்.சூழ்நிலையை அனுசரித்து செல்ல வேண்டும். தனியார் துறையில் இருப்பவர்கள் வேலையை விடக் கூடாது.
வேறு வேலை கிடைப்பது கடினம்.லஞ்சம் மிகுதியாக புழங்கக்கூடிய அரசுத் துறையில் இருப்பவர்கள் வேலையை இழக்கலாம்.குருவின் பார்வை படும் இடங்கள் சாதகமாக இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும். பூர்வீகச் சொத்து தொடர்பான பாகப் பிரிவினை நடந்து உங்கள் பங்கு முழுமையாக கிடைக்கும். தினமும் ஆதித்ய ஹருதயம் கேட்பதும், படிப்பதும் இன்னல்களை நீங்கும்.உங்களை வாட்டி எடுக்கும் கடன் பிரச்சனையில் இருந்து மீள மைத்திர முகூர்த்த நாட்களை பயன்படுத்த வேண்டும்.
பல புதிய நல்ல வாய்ப்புகள் ஒப்பந்தங்கள் தேடி வரும். நிறைய அலைச்சலும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். கிடைத்த வாய்ப்யை பயன்படுத்த முடியாத வகையில் ஆரோக்கிய குறைபாடு இருக்கும் பெரிய தொழில் முதலீட்டால் பெறும் பயன் உண்டு. வேலையாட்களின் நம்பகத்தன்மை குறையும்.முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வேலையாட்களிடம் ஒப்படைக்கும் முன்பு பல முறை யோசிக்கவும்.
ஜனன கால ஜாதகத்தில் சுப வலிமை பெற்ற கிரகங்களின் தசா புக்தி நடப்பவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு அகலும்.வீண் வம்பு, வழக்கிலிருந்து விடுபடுவார்கள். எதிரிகள் நட்பு கரம் நீட்டுவார்கள். வழக்குகள் சாதகமாகும்.வேற்று மொழி நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்டமும்,பேரதிர்ஷ்டமும் ஒருங்கே உங்களை வழி நடத்தும். குறுக்கு வழியை கடைபிடித்தவர்கள் தர்மம்,நேர்மை நியாயம் பற்றிப் யோசிப்பார்கள்.புண்ணிய பலத்தை அதிகரிக்கும் தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள்.சிலருக்கு கோவில் கட்டும் பாக்கியம் கிடைக்கும். தடைபட்ட கோவில் கட்டும் பணி நடைபெறும். பலருக்கு ஆன்மீக ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.சமூக அந்தஸ்து,மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.சிலர் எதையாவது யோசித்து துக்க மிகுதியால் நிம்மதியான தூக்கத்தை தொலைப்பார்கள்.சிலர் மன மாற்றத்திற்கு குறுகிய காலத்திற்கு வெளிநாடு,வெளி மாநிலத்திலுள்ள மகன் அல்லது மகள் வீட்டிற்கு சென்று வரலாம்.
சக்கரத்தாழ்வாரை வெள்ளிக்கிழமைகளில் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் பணப்புழக்கம் அதிகரித்து கடன் தீரும். வீட்டின் மாடியில் பறவைகளுக்கு தானியம் மற்றும் தண்ணீர் வைக்க பாவங்கள் விலகும்.