மகரம்- 2026 வார ராசிபலன் 16.8.2026 முதல் 22.8.2026 வரை

சிலருக்கு தொழிலில் மாற்றம் ஏற்படும்.
Magaram
Published on: 

மகரம்

மேன்மையான வாரம். ராசிக்கு குருவின் நேரடி பார்வை உள்ளதால் தைரியம், சுறுசுறுப்பு அதிகரிக்கும். தவறாக புரிந்த உறவினர்கள் பகைமை மறப்பார்கள். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். பாகப்பிரி வினைக்கு உடன் பிறப்புகள் சம்மதிப்பார்கள். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள். குல தெய்வ கடாட்சம், முன்னோர்களின் நல்லாசி கிட்டும். திருமணத் தடை அகலும். திருமணமான இளம்பெண்கள் கருத்தரிப்பார்கள். ஆரோக்கிய தொல்லை குறையும். வழக்குகள் வெற்றியடையும். அரசு உத்தியோக முயற்சியில் சாதகமான பலன் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சிலருக்கு தொழிலில் மாற்றம் ஏற்படும். தொழிலிலுக்கு சகோதரர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். சுய ஜாதகம் அறிந்து புதிய முதலீட்டில் ஈடுபடுவது நல்லது. வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com