மகரம்- 2026 வார ராசிபலன் 28.6.2026 முதல் 4.7.2026 வரை

தாய் வழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும்.
Magaram weekly rasipalan
மகரம் வார ராசிபலன்
Published on

மகரம்

மகிழ்ச்சியான வாரம். ராசிக்கு புதன் குரு சுக்ரனின் சமசப்தம பார்வை உள்ளது. வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும். பங்கு வர்த்தகத்தில் வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் சாதகமான சூழல் உண்டாகும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம், சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமான நகைகள் மீண்டு வரும். இதுவரை தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும். கணவர் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தாய் வழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உறவுகளின் வருகை ஆனந்தத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். திறமைக்கும், தகுதிக்கும் தகுந்த கவுரவப் பதவிகள் கிடைக்கும். உங்களின் நற்குணங்களால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை அழித்து தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். முன் கோபத்தைக் குறைந்து எதிலும் நிதானமாக செயல்பட வெற்றி உண்டாகும். தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்பது நல்லது.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com