மகரம்- 2026 வார ராசிபலன் 25.10.2026 முதல் 31.10.2026 வரை

புதிய சொத்துக்கு அட்வான்ஸ் கொடுப்பதை தவிர்க்கவும்.
Magaram
Published on: 

மகரம்

சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். வார இறுதியில் குரு பகவான் அதிசாரமாக அஷ்டம ஸ்தானம் செல்கிறார். ராசிக்கு நீச்ச செவ்வாயின் பார்வை உள்ளது. தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பெண்கள் குடும்பத்தில் பிறரின் தலையீட்டை தவிர்க்கவும். திருமண முயற்சியில் சிறு பின்னடைவு ஏற்படலாம். வந்த வரன்கள் கை நழுவிச் செல்லும். தள்ளி வைத்த அறுவை சிகிச்சை தற்போது செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். புதிய வழக்குகள் உருவாகும். பழைய வழக்குகள் விசாரணைக்கு வரும். புதிய சொத்துக்கு அட்வான்ஸ் கொடுப்பதை தவிர்க்கவும். குலத் தொழிலில் இருப்பவர்கள் தந்தையின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடப்பது அவசியம். சிலர் நண்பர்களுக்காக ஜாமீன் பொறுப்பு ஏற்று ஆற்றலையும் வட்டியும் சேர்த்து கட்டுகின்ற நிலை ஏற்படலாம். ஏற்றம் இறக்கம் நிறைந்த வாழ்க்கையில் எதையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டும். பொறுப்புடன் நடந்து கொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம். ராசியை ராகு நெருங்குவதால் பௌர்ணமி அன்று துர்க்கையை வழிபட மேன்மையான பலனை அடைய முடியும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com