மகரம்- 2026 வார ராசிபலன் 23.8.2026 முதல் 29.8.2026 வரை

தொழில் வருமானம் சிறப்பாக அமையும்.
Magaram
Published on

மகரம்

மனச் சுமை குறையும் வாரம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை உள்ளது. புகழ், பணம், அந்தஸ்து, செல்வாக்கு பெறுவீர்கள். எதிர்பாராத திடீர் தனலாபத்தால் ஆடம்பர வாழ்க்கையை மனம் விரும்பும். பங்குச் சந்தை ஆர்வம அதிகமாகும். எதையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும். நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் உடன் பிறந்தவர்களின் திடீர் மனமாற்றம் மத்தியஸ்த்தரை அணுகவைக்கும். இடப்யெர்ச்சி செய்ய நேரும். புதிய தொழில் முயற்சிக்காக வெளிநாடு சென்று வர திட்டமிடுவீர்கள். பெருமையை பறைசாற்றும் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வருமானம் சிறப்பாக அமையும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஓய்விற்காக, மன நிம்மதிக்காக பிள்ளைகளின் வீட்டிற்கு சென்று வரும் ஆர்வம் உண்டாகும். கால்நடை மற்றும் உயிரின வளர்ப்பு, மாடித் தோட்டம் அமைப்பது போன்றவற்றில் ஆர்வம் அதிகமாகும். சில பெண்களை பல வருடங்களாக அச்சுறுத்தி வந்த மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மகான்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்று தரிசிப்பதால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com