

மனப்பக்குவத்தை அதிகரிக்க வேண்டிய வாரம். ராசியை ராகு பகவான் நெருங்கி வந்து கொண்டிருக்கிறார். ராகு ராசியை நெருங்குவதால் திருமணம் சற்று காலதாமத மாகும். திருமணமான தம்பதியினருக்கு கருத்து வேறுபாடு மனப்போராட்டம் மிகுதியாகும். கூட்டாளிகளிடம் பணப் பரிவர்தனையில் கருத்து வேறுபாடு ஏற்படும். கூட்டு தொழில் மற்றும் புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் படிப்பு, திருமணம் வீடு, வாகன செலவு என வாழ்க்கைக்கு அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து மகிழ்வீர்கள். வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரும். எது எப்படி இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். ஜோதிடம், மாந்தரீகம், தியானம், அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவம் கற்க ஆர்வம் உண்டாகும். சிவ வழிபாடு செய்வதால் குடும்பத்தில் நிம்மதி கூடும்.