

ஆரவாரமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்ச பங்க ராஜயோக நிலையில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கூட்டுத் தொழில் சிறப்படையும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். அலுவலகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை விஷயத்தில் நல்லவை நடைபெறும். தம்பதிகளிடம் நெருக்கம் கூடும். காதல் துளிர்க்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் விரைவில் நீங்கும். கடன்கள் படிப்படியாக குறையும். தன் நம்பிக்கை தைரியம் கூடும் அஷ்டம ஸ்தானத்தில் அதிசார குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற வாக்குவாதம் செய்து நேரத்தை வீணடிக்காதீர்கள். 3.11.2026 அன்று அதிகாலை 3.46 முதல் 5.11.2026 காலை 9.34 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளிநாட்டுப் பயணம், சொத்துக்கள் மீதான பத்திரப் பதிவு ஒத்திப்போகலாம். பணம் கொடுக்கல், வாங்கலுக்கு உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். குடும்ப நிர்வாகச் செலவு மற்றும் உறவுகளின் இல்ல சுபச் செலவு என செலவுகளின் பட்டியல் கூடும். வயது முதிர்ந்தவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கான தான தர்மம் வழங்கவும்.