கடகம்- 2026 வார ராசிபலன் 8.11.2026 முதல் 14.11.2026 வரை

நிதானமும், நம்பிக்கையும் உங்களை காப்பாற்றும்.
Kadagam
Published on: 

கடகம்

ஆதாயமான வாரம்.ராசியில் எந்த கிரகமும் இல்லை ராசியை எந்த கிரகம் பார்க்கவில்லை. பொதுவாக ராசியை எந்த கிரகமும் பார்க்காமல் இருக்கும்போது தடைபட்ட செயல்களை செய்து முடிப்பது நல்லது. நிதானமும், நம்பிக்கையும் உங்களை காப்பாற்றும். முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் தொழில், உத்தியோகத்தில் நிலவிய தாமதம், மந்த நிலை அகலும். அரசு ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்ல வேன்டும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும். ராசிக்குள் கேதுவும் ஏழாம் இடத்திற்குள் ராகுவும் நுழை வதால் அடுத்தவர் விஷயத்தில் தலை யிடாமல் இருப்பதுடன் யாரையும் நம்பக்கூடாது. கேளிக்கையான உல்லாச பயணங்கள் நடைபெறும். புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். ஆரோக்கியத்தை பேணுவது அவசியம்.சஷ்டி விரதம் இருந்து புனித நீரால் அபிஷேகம் செய்து முருகனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X