கடகம்- 2026 வார ராசிபலன் 27.9.2026 முதல் 3.10.2026 வரை

சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும்.
Kadagam
Published on: 

கடகம்

நிம்மதியான வாரம். ராசியில் குரு செவ்வாய் சேர்க்கை உள்ளது. சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். சுபவிரயம், சுப மங்கலச் செலவு உண்டாகும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். குடும்பத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எதைப் பற்றி கவலைப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே தலையாய நோக்கமாக இருப்பீர்கள். வீரமும் தைரியமும் எடுத்த காரியத்தில் இறுதி வரை போராடி ஒரு முடிவை பார்த்து விட வேண்டும் என்ற உத்வேகமும் கூடும். குடும்பத்தில் சந்தோஷமும், மனமகிழ்ச்சியும் நிலைத்து இருக்கும். மகாளய பட்ச காலத்தில் உடல்நலம் குறைந்தவர்களின் தேவை அறிந்து உதவவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com