கடகம்- 2026 வார ராசிபலன் 25.10.2026 முதல் 31.10.2026 வரை

உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
Kadagam
Published on: 

கடகம்

முக்கிய காரியங்கள் கைகூடும் வாரம். ராசியில் சஞ்சரித்த உச்ச குரு பகவான் அதிசாரமாக வார இறுதியில் தனம் வாக்கு குடும்ப ஸ்தானம் செல்கிறார். அங்கு சஞ்சரிக்கும் கேதுடன் சேர்க்கை பெறுகிறார். வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். பொருளாதார பாதிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை. வரவு, செலவு வழக்கம் போல் இயல்பாக இருக்கும். வராக்கடன்கள், நிலுவை சம்பளம் வசூலாகும். குடும்பத்தின் நிம்மதிக்காக கோபத்தை வெல்லும் சூட்சமத்தை கற்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். சக ஊழியர்களுடன் பொறுமையுடன், பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். மூத்த உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும். புதிய சொத்து வாங்குதல், முன் பணம் செலுத்துவது, பத்திரப் பதிவு ஆகியவற்றை ஒத்தி வைக்கவும். சிலரின் வாழ்க்கை துணைவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இல்லறம் இனிக்கும். சிலர் குழந்தை பாக்கியத்திற்கு மாற்று முறை மருத்துவத்தை நாடலாம். பௌர்ணமி அன்று பாலபிஷேகம் செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com